மேலும் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Jun-2025
கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டக்குப்பம் அடுத்த மஞ்சக்குப்பம் கிராமத்தில் பிலவாடி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி தனக்கோடி, நேற்று முன்தினம் வழக்கம் போல கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை வந்து பார்த்தபோது, அங்கிருந்த உண்டியலை காணவில்லை. மர்ம நபர்கள் அதை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு, 500 மீ., துாரத்தில், வீசி எறிந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Jun-2025