உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் அருகே தற்காலிக சாலை துண்டிப்பு

மேல்மலையனுார் அருகே தற்காலிக சாலை துண்டிப்பு

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் - அவலுார்பேட்டை சாலையில் தாயனுார், கோ.தோப்பு அருகே வெள்ளநீர் சாலையின் குறுக்காக மேல்மலையனுார் ஏரிக்கு செல்கிறது.இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். இப்பகுதியில் மஸ்தான் எம்.எல்.ஏ., கடந்தாண்டு 2 இடங்களிலும் தரைப்பாலம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்துச் சென்றது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவலுார்பேட்டையிலிருந்து, கப்ளாம்பாடி, செக்கடிக்குப்பம், கொடுக்கன்குப்பம் வழியாக மாற்று பாதையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை