உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் திருவிழாவில் பதற்றம் வானுார் அருகே போலீஸ் குவிப்பு

கோவில் திருவிழாவில் பதற்றம் வானுார் அருகே போலீஸ் குவிப்பு

வானுார்: வானுார் அருகே கோவில் திருவிழாவில், பொங்கலிட வந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.வானுார் அடுத்த ஒட்டை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடந்து வருகிறது.முக்கிய விழாவாக நேற்று சாகை வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடந்தது. இதில் வழக்கமாக பொங்கலிடுபவர்கள் பொங்கிலிட தயாராகினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பொங்கலிட வந்தனர்.கிராம கோவிலில் வழக்கமாக பொங்கல் வைப்பவர்கள் அல்லாமல் புதிதாக ஒரு தரப்பினர் வந்ததால் இருதரப்பிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி மேற்பார்வையில் வானுார் மற்றும் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.பின், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, புதிதாக பொங்கலிட வந்தவர்களை, உடனடியாக பொங்கலிட்டு செல்லும் படி போலீசார் அறிவுறுத்தினர்.அதைத் தொடர்ந்து அவர்கள், பொங்கலிட்டு சென்ற பிறகு, வழக்கம் போல் பொங்கல் வைப்பவர்கள் வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை