மேலும் செய்திகள்
கண்தானம்
23-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் உடல் நலம் குறைவால் இறந்தவரின் கண்கள் ரோட்டரி சங்கம் மூலம் தானமாக பெறப்பட்டது. விழுப்புரம், ஆஞ்சநேயர் மேற்கு குளக்களை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர குப்தா. மணிமேகலை ஸ்நாக்ஸ் கடை உரிமையாளர். இவர், நேற்று உடல்நல குறைவால் இறந்தார். இவரின் கண்கள் ரோட்டரி சங்க சேர்மன் சரவணக்குமார் ஏற்பாட்டின் பேரில் தானமாக பெறப்பட்டது. இறந்த வெங்கடேஸ்வர குப்தாவின் கண்களை, அவரின் குடும்பத்தார் சுந்தர் ஸ்கேல் உரிமையாளரும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான பாலகுருநாதன் முன்னிலையில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். 2024-25ம் ஆண்டில் 2வது முறையாக ரோட்டரி சங்கம் சார்பில் கண் தானம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
23-Dec-2024