உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆங்கிலேயேர் கட்டிய பயணியர் பங்களா யுனெஸ்கோ குழு வருகையால் பளபளப்பானது

ஆங்கிலேயேர் கட்டிய பயணியர் பங்களா யுனெஸ்கோ குழு வருகையால் பளபளப்பானது

செஞ்சியில் உள்ள ஆங்கிலேயர் கட்டிய பயணியர்களுக்கான பங்களாவை யுனெஸ்கோ குழுவினருக்காக புதுப்பித்ததால் புது பொலிவுடன் காணப்படுகிறது.செஞ்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது உயர் பதவியில் உள்ளவர்கள் தங்குவதற்காக 1915ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் ஆடம்பர பங்களாவாக கட்டினர். உயரமான மேற்கூரைகளை தரமான தேங்கு மரத்தினாலும், சுடுமண் ஓடுகளைக் கொண்டும் நீளமான வராண்டா, காற்றோட்டமான முற்றத்துடன் கட்டினர்.ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இந்த பங்களா நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு செஞ்சிக்கு வரும் மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அரசு உயர் அதிகாரிகள் தங்கிச் செல்கின்றனர்.கவர்னர், முதல் அமைச்சர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் வரும் போது சிறிய அளவிலான மராமத்து பணிகளை செய்தும், தீரைச்சீலைகளை மாற்றியம் தயார் செய்வார்கள்.கடந்த மாதம் 27ம் தேதி செஞ்சி கோட்டைக்கு வந்த யுனெஸ்கோ குழுவினர் இங்கு தங்குவார்கள் என்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து பங்களாவை புதுப்பிக்கும் பணி நடந்தது. தரை பகுதியில் இருந்து மேற்கூரை வரை புதுப்பித்ததுடன், சுவர்கள், கதவு, ஜன்னல் மற்றும் துாண்கள் என அனைத்தையும் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர்.இதனால் நெடுஞ்சாலைத்துறை பயணியர் பங்களா 109 ஆண்டுகளுக்கு பிறகும் புத்தம் புதிய கட்டடம் போல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை