உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி

குளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி

செஞ்சி, ; குளத்தில் தவறி விழுந்து இறந்த விவசாயி உடல் மீட்கப்பட்டது. செஞ்சி அடுத்த மாத்தூர் திருக்கையை சேர்ந்தவர் கண்ணன் மகன் அர்ச்சுனன், 50; விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஊரில் உள்ள தாமரை குளத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில் நேற்று காலை குளத்திற்கு மீன்பிடிக்க சென்றபோது இளைஞர்கள் அர்ச்சுனன் உடல் குளத்தில் மிதப்பதை கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் குளத்தில் கிடந்த உடலை மீட்டனர். குளத்திற்கு சென்ற அர்ச்சுனன் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என அவரது மனைவி துளசி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !