உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

 சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது. செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நாளை 30ம் தேதி நடக்கிறது. அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ ஹோமமும், 5:00 மணிக்கு முத்தங்கி அலங்காரத்தில் ரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். மலை மீதுள்ள கோவிலில் மதில் சுவர் கட்டும் பணி நடந்து வருதால் மலை அடிவாரத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை