மேலும் செய்திகள்
மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை தீபம்
14-Dec-2024
மரக்காணம்: திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் ஸ்ரீ முக்தியாஜல ஈஸ்வரன் கோவில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் உள்ள மலை மீது ஸ்ரீ முக்தியாஜல ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மலை மீது மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீ முக்தியாஜல ஈஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகம் எதிரே உள்ள மலை குன்றின் மீது ஆறு அடி உயரமுள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.திண்டிவனம் சுற்றுப் பகுதி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீ லோகாம்பிகை சமேத மாகாபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 10 அடி உயர கொப்பரை கோவில் மேல் தளப் பகுதியில் வைக்கப்பட்டு 200 கிலோ நெய் கொண்டு மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Dec-2024