மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம்
24-Sep-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் காங்., சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகம் எதிரில், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அமைப்பு மற்றும் இளைஞர் காங்.,சார்பில் நிகழ்ச்சி நடந்தது. ஓ.பி.சி., அமைப்பின் மாநில செயலாளர் புலி மணி தலைமை தாங்கினார். திண்டிவனம் தொகுதி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தன் வரவேற்றார். மாநில துணை தலைவர் ரங்கபூபதி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் வண்ணமாறன், பர்வீன் பானு, சுரேஷ்குமார், பார்த்தீபன், வடிவேல், ராஜசேகர் சிலம்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24-Sep-2025