உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணைத் தாக்கியவர் கைது

பெண்ணைத் தாக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், புதுத்தெருவைச் சேர்ந்தவர் விருப்பலிங்கம் மனைவி அல்லி, 42; இவர், சில தினங்களுக்கு முன் திருக்கோவிலுார் அடுத்த நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், 33; என்பவருக்கு 6,000 ரூபாய் கொடுத்துள்ளார்.நேற்று முன்தினம் விழுப்புரம் பாத்திமா லே-அவுட்டிற்கு வந்த அல்லி, அங்கிருந்த அய்யப்பனிடம் கொடுத்த பணத்தை கேட்ட போது, தர மறுத்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ