உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலைகீழாக நின்றும் நடக்கவில்லை தள்ளாடும் முதியவரின் பரிதாபம்

தலைகீழாக நின்றும் நடக்கவில்லை தள்ளாடும் முதியவரின் பரிதாபம்

விழுப்புரம்: தன் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் ஒருவர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஆனால், அப்படி நின்றும் அவர் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.விழுப்புரம் அடுத்த நல்லரசன்பேட்டையை சேர்ந்தவர் வேணுஞானமூர்த்தி, 76; ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கூறியதாவது:என் வீடு, நிலம், கடைகள் ஆகியவற்றை சகோதரர் மற்றும் இருவர் சேர்ந்து அபகரித்தனர். இதுகுறித்து வளவனுார் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என, எல்லா இடங்களிலும், 200க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டேன்.இவ்வாறு தெரிவித்தார்.இதையடுத்து, கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து, மனு அளித்துவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. வேணுஞானமூர்த்தி தலைகீழாக நின்று போராடினாலும், அவர் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை