உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரத்தியங்கரா கோவில் செல்லும் சாலை படுமோசம்

பிரத்தியங்கரா கோவில் செல்லும் சாலை படுமோசம்

வானுார்; இடையஞ்சாவடி தனியார் வாட்டர் கம்பெனியில் இருந்து பிரத்தியங்கரா கோவில் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி சந்திப்பு அருகே 72 அடி உயர பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும், கோவிலைச் சுற்றி அதிகளவில் குடியிருப்புகள் வந்து விட்டன. இப்பகுதியில் வசிப்போர், புதுச்சேரிக்கு செல்ல மொரட் டாண்டி வழியாக வந்து பைபாசை வந்தடைகின்றனர். இதே போன்று பிரத்தியங்கரா கோவில் பகுதியில் இருந்து இடையஞ்சாவடி சாலை சந்திப்பு வழியாக ஆரோவில் பகுதிக்கும் செல்கின்றனர்.மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், இடையஞ்சாவடி சாலை சந்திப்பு அருகே தனியார் வாட்டர் கம்பெனிக்கு செல்லும் சாலை படுமோச மாக உள்ளது. ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் இருப்ப தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.தற்போது மழைபெய்து வருவதால் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதோடு, டூ வீலர்களில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ