மேலும் செய்திகள்
46 வகை சேவைகளுடன் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
03-Sep-2025
தமி ழகத்தில் அரசு திட்டங்கள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் துவங்கப்பட்டது. நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் இம்முகாம்களில், ஆளுங்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகின்றனர். அவர்கள் பேசும்போது, தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக, இம்முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்கும். தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைவதற்கு, தேர்தலில் பொதுமக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என பேசுகின்றனர். அரசு நிகழ்ச்சியான இம்முகாமில், ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவு திரட்டுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
03-Sep-2025