உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனு கொடுக்க வந்த பெண் மயங்கியதால் பரபரப்பு

மனு கொடுக்க வந்த பெண் மயங்கியதால் பரபரப்பு

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, மனு கொடுக்க வந்த பெண் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி அமுதவள்ளி,50; இவரது மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால், இந்த பதிவை எடுத்து கொண்டு, உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பெற, அமுதவள்ளி, நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுக நலத்துறை அலுவலகத்திற்கு வந்தார். இங்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்ததை யொட்டி, போலீசார் உள்ளே விட மறுத்தனர். வெளியே நீண்டநேரம் காத்திருந்த அமுதவள்ளி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை