வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யார் வீட்டுதோ யாரார் எடுத்து செல்கிறார்கள்... நமெக்கென்ன என்று தான் இருப்பார்கள். ..அல்லது தெரிந்தே நடக்கும் நாடகம்.
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலைய வளாக பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறிய ரயில்வே போலீசாரின் செயலால் ரயில் தளவாட பொருட்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. விழுப்புரம் ரயில் நிலையம் தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ளது. தென் தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் கடந்து செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி, கட்டண பார்க்கிங் வசதி, இலவச பார்க்கிங் வசதி, 24 மணி நேர போக்குவரத்து வசதி, ஆன்லைன் சேவைகள் உள்ளன. விழுப்புரம் ரயில் நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடக்கிறது. திருச்சி கோட்டத்தில் மிகவும் முக்கிமான ரயில் சந்திப்பு நிலையமாக உள்ள விழுப்பரத்தில் கேங்மேன், தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு, சிக்னல் மற்றும் டெக்கினிக்கல் பிரிவு ஊழியர்களுக்கு தனி அலுவலகங்கள் இயங்குகிறது. சில அலுவலங்கள் ரயில் நிலையத்தில் இருந்து சிறிது துாரத்தில் இயங்குகிறது. ரயில் பெட்டி பராமரிப்பு பணிகளுக்கு, ரயில்வே துறைக்கு சொந்தமான தளவாட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ரயில்வே தடவாள பொருட்கள் திருட்டு போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. துறை சார்ந்த அலுவலர்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தொடர்பு கொண்டு ரகசியமாக புகார் அளித்தும் மர்ம நபர்கள் பிடிக்க முடியவில்லை. அலுவலகங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் இருந்தும் அதில் தெரியாதபடி தளவாட பொருட்களை திருடி செல்கின்றனர். ரயில் நிலைய பிளாட்பாரங்களில் மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் போலீசார், ரயில்வே தளவாட பொருட்கள் இருக்கும் இடங்களிலும், ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது இல்லை. இதனை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரயில்வே தளவாட பொருட்களை தொடர்ந்து திருடி வருகின்றனர். ரயில்வே துறைக்கு சொந்தமான தளவாட பொருட்களை தொடர்ந்து திருடிச் செல்லும் மர்ம நபர்களை ரயில்வே போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
யார் வீட்டுதோ யாரார் எடுத்து செல்கிறார்கள்... நமெக்கென்ன என்று தான் இருப்பார்கள். ..அல்லது தெரிந்தே நடக்கும் நாடகம்.