உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 129 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் விழல் ஏலம் விட்டு அறுவடை செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழல் ஏலத்திற்காக தயாராகி இருந்த நிலையில் நேற்று இரவு 8:30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இதில் விழல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், அருகில் பாதுகாப்பான இடத்திற்கு சென்று சிறிது நேரம் தங்கியிருந்து வீடுகளுக்கு திரும்பினர். மர்ம நபர்கள் இந்த விழலுக்கு தீ வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை