உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்பத்தினர் துாங்கிய அறையை பூட்டி சாவகாசமாக கொள்ளையடித்த திருடன்

குடும்பத்தினர் துாங்கிய அறையை பூட்டி சாவகாசமாக கொள்ளையடித்த திருடன்

விழுப்புரம்; விழுப்புரம், வழுதரெட்டி கவுதம் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; கடலுார் தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று இரவு குடும்பத்துடன் தரை தளத்தில் உள்ள அறையில் துாங்கினார். அதிகாலை வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மணிகண்டன் குடும்பத்தினர் துாங்கிய அறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, சாவகாசமாக வீடு முழுதும் பொருட்களை தேடினார்.அறையில் இருந்த பீரோவையும் உடைத்துள்ளார். வீட்டில் நகை, பணம் என, விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் சிக்காததால், பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மட்டும் திருடிச் சென்றுள்ளார். நேற்று காலை தங்கள் அறை கதவு வெளிப் பக்கமாக பூட்டி இருப்பதை அறிந்து, மணிகண்டன் பக்கத்து வீட்டில் வசிப்பவரை, மொபைல் போனில் அழைத்து, பூட்டை உடைக்குமாறு கூறியுள்ளார்.அதன் பிறகே, கொள்ளை நடந்த விபரம் மணிகண்டனுக்கு தெரியவந்தது. இந்த திருடன் அதே தெருவில் உள்ள ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவியான சிவபூஷ்ணம் என்பவர் வீட்டிலும் புகுந்து பொருட்களை திருடி உள்ளார். அந்த வீட்டில் ஆளில்லாததால், திருட்டு போன பொருட்கள் விபரம் தெரியவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை