பூதக்காளி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
வானுார்; சுயம்பு பூதக்காளி அம்பாள் கோவில் திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளியனுார் அடுத்த ஞா னக்கல்மேடு கிராமத்தில் சுயம்பு பூதக்காளி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஆடி பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 சுமங்கலிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு யாகசாலை பூஜைகள், கலச நீர் அபிஷேகம், பால்குட அபிஷேகமும், அம்மனுக்கு சண்டி ஹோமமும், பூர்ணா ஹூதியும் நடந்தது. பக்தர்கள், குடும்ப நன்மை வேண் டி பூஜை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், கிளியனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கொந்தமூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஜெயராமன், கிருஷ்ணராஜ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், அன்பரசன், ஏழுமலை, விஜயக்குமார், ரகு, ராஜகுரு பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் புருஷோத்தமன், உதயகுமார், வெ ங்கடேசன், கோவில் பூசாரி லட்சுமி, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.