மணல் கடத்திய மூவருக்கு வலை
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே பைக்கில் மணல் கடத்திய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே சித்தாத்துார் திருக்கை கிராமத்தில் தாலுகா சப்-இன்ஸ் பெக்டர் குணசேகரன் தலை மையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் மூட்டைகளை ஏற்றி கொண்டு மூன்று பேர் தனித்தனி பைக்கில் வந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும் மணல் மூட்டைகளையும், பைக்குகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர். விசாரணையில், தப்பியோடிய மூன்று பேரும், விழுப்புரம் அடுத்த தளவானுாரை சேர்ந்த செந்துாரபாண்டியன், மூர்த்தி, பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி என்பதும், இ வர்கள் மூன்று பேரும் சித்தாத்துார் திருக்கை பகுதி மலட்டாற்றில் இருந் து மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.