திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பில் நுாறு சதவீத தேர்ச்சி
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில், 495 மதிப் பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தார்.திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 164 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொடர்ந்து 9 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த பள்ளி மாணவி லோகிதா, 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார்.மாணவர் யஷ்வந்த் 491 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2வது இடமும், மாணவி மகாலட்சுமி 490 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இந்த பள்ளியை சேர்ந்த 15 மாணவர்கள் 480 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். 460 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 81 மாணவர்கள் பெற்றுள்ளனர்.கணித பாடத்தில் 29 பேரும், அறிவியலில் 29 பேர், சமூக அறிவியலில் 15 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் தேவராஜ் சால்வை அணிவித்து பாராட்டினார். இதில் பள்ளியின் முதல்வர் அருள்மொழி உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.