மேலும் செய்திகள்
மார்க்கெட் கமிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
02-Aug-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச., பேரவை செயலர் சேகர் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., செயலர் மூர்த்தி, எல்.பி.எப்., தலைவர் கிருஷ்ணன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்; தொழிலாளர், விவசாயிகள் விரோத போக்கையும் கைவிட வேண்டும்; என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
02-Aug-2025