மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
04-Apr-2025
திண்டிவனம் : திண்டிவனத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.பங்கஜம் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு, திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராம்டெக்ஸ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள வணிகர் தின விழாவின் உரிமை மீட்பு மாநாடு தொடர்பாக சங்க நிர்வாகிகள் பி.ஆர்.எஸ். துணிக்கடை ரங்கமன்னார், காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏழுமலை, பாத்திர வியாபாரிகள் சங்கம் பால்பாண்டியன் ரமேஷ், நகை வியாபாரிகள் சங்கம் ராம்லால் ரமேஷ், கல்கண்டு சுந்தரம் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சேகர், மதிவாணன், ஜாகீர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெறும் மாநாட்டில் திண்டிவனம் பகுதியிலிருந்து திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04-Apr-2025