உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி; விவசாயிகளுக்கான கருத்தரங்கு

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி; விவசாயிகளுக்கான கருத்தரங்கு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி, உயிர்ம பண்ணைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி, உயிர்ம பண்ணைய தொழில்நுட்பங்கள் குறித்த கையெட்டை, விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார். முன்னதாக, தோட்டக்கலை துறை சார்பில், இயற்கை வேளாண்மை மூலம் விளைவிக்கும் வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், வேளாண் துறை இணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அன்பழகன் உட்பட அலுவலர்கள், விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி