மேலும் செய்திகள்
திண்டிவனத்தில் விதிமீறிய வாகன ஓட்டிகளால் நெரிசல்
14-Dec-2024
திண்டிவனம் : திண்டிவனத்திலுள்ள மேம்பாலத்தின் நான்கு வழிகளும் சீரமைப்பு பணிகளுக்காக நேற்று மூடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திண்டிவனம் மேம்பாலம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகிறது. இதில் பாலத்தின் நான்கு வழிகளிலும் உள்ள இணைப்பு பகுதிகள் மேடும் பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், பாலத்தின் மேல்பகுதியிலுள்ள ரவுண்டானா பகுதியை தாங்கி நிற்கும் துாண்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.அதையொட்டி பாலத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது. சீரமைப்பு பணிகளுக்காக நேற்று இரவு 7.00 மணியளவில் பாலத்தின் மேல் பகுதிக்கு செல்லும் நான்கு வழிகளும் மூடப்பட்டன. இதனால் திண்டிவனம் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ்வழியாக ஒரே சமயத்தில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்தனர்.
14-Dec-2024