உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பை பாஸ் சாலையில் போக்குவரத்து சீரமைப்பு

பை பாஸ் சாலையில் போக்குவரத்து சீரமைப்பு

திண்டிவனம்: திண்டிவனம் பை பாஸ் சாலையில், எஸ்.பி., தலைமையில் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, தீபாவளி முடிந்து, நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த சலவாதி புறவழிச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படாமல் சீரமைப்பு பணியில் எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அப்போது, டி.எஸ்.பி., பிரகாஷ், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ