மேலும் செய்திகள்
ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள்
19-Sep-2024
திண்டிவனம்: திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுமதி தலைமை தாங்கினார். திண்டிவனம் கல்வி மாவட்ட கன்வீனர் பாலசுப்ரமணிய பாரதி வரவேற்றார்.புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்போஸ்கோ முன்னிலை வகித்தார்.முகாமில், ஜே.ஆர்.சி., மாநில பயிற்றுநர் தண்டபாணி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம், பயிற்றுநர் சின்னப்பன், ஜே.ஆர்.சி., இணை கன்வீனர் விஜய ஆனந்தன் மற்றும் சொர்ணமணி ஆகியோர் ஜே.ஆர்.சி., மற்றும் ரெட்கிராஸ் வரலாறு, முதல் உதவி பயிற்சி, ஜெனிவா ஒப்பந்தம், சாலை பாதுகாப்பு விதி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினர். ஆசிரியர் வேளாங்கண்ணி நன்றி கூறினார்.
19-Sep-2024