மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
06-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனம் அரசு கல்லுாரியில் மயிலம் தொகுதிக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. மயிலம் சட்டசபை தொகுதிக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் முகவர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பயிற்சி முகாமிற்கு தனி துணை ஆட்சியர் முகுந்தன் தலைமை தாங்கினார். திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் முன்னிலையில் தேர்தல் துணை தாசில்தார் விமல் பயிற்சி அளித்தார். முகாமில், தி.மு.க., சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், மாவட்ட அவைத்தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், ராஜாராம், செழியன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதேபோல் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர்கள் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, விநாயகமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, வழக்கறிஞர் அணி செயலாளர் வீரசம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டிவனம் தொகுதிக்கான கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள், பூத் முகவர்கள் ஒன்றாக பங்கேற்றனர். ஆனால் மயிலம் தொகுதிக்கான கூட்டத்தில் முதலில் தி.மு.க.,வினரும், அடுத்து நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரும் பங்கேற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
06-Oct-2025