மேலும் செய்திகள்
ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்
15-Dec-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள புத்தனந்தல் கிராமத்தில் விவசாயம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜவஹர்லால் மேற்பார்வையில், முனைவர் ராஜசேகர் தலைமையில் கிராம திட்டத்தின் கீழ் மாணவர்கள் ஜெய்குமார். லோகேஷ் உள்ளிட்டவர்களின் தொகுப்பில் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற 50க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பேராசிரியர்கள் ராவணச்சந்தர், கோபி ஆகியோர் தென்னை வேர் ஊட்டம், பந்தல் காய்கறி சாகுபடியில் நிறைந்த வருமானம் மற்றும் அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அளித்தனர்.இதில் பஞ்சாயத்து தலைவர் மேனகா சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
15-Dec-2024