உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாழ்வாதார திட்ட கள பயிற்றுனர்களுக்கு பயிற்சி

வாழ்வாதார திட்ட கள பயிற்றுனர்களுக்கு பயிற்சி

செஞ்சி: செஞ்சியில் புதிய வாழ்வாதார திட்டம் துவக்க விழா மற்றும் முதன்மை வள பயிற்றுனர்களுக்கு 5 நாள் பயிற்சி துவக்க விழா நடந்தது. கிராமங்களில் நலிவடைந்த குடும்பங்களைத் தேர்வு செய்து அவர்களை கண்காணிக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் புதிய வாழ்வாதார திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக செயல்படுத்த உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, வானுார் வட்டாரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, செஞ்சியில் திட்ட துவக்க விழா மற்றும் கள பயிற்றுனர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இத்திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். வட்டார மேலாளர் காயத்ரி வரவேற்றார். மாவட்ட வள பயிற்றுனர் கணேசன் பயிற்சியளித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். 40க்கும் மேற்பட்ட கள பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ