உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 18 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், சென்னை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜூ கண்டமங்கலத்திற்கும், கண்டமங்கலம் விஜயகுமார் வளத்திக்கும் மாற்றப்பட்டனர்.பிரம்மதேசம் காமராஜ் விழுப்புரம் தாலுகா, அரகண்டநல்லுார் சின்னப்பன் நல்லாண்பிள்ளை பெற்றாள், நல்லாண்பிள்ளைபெற்றாள் தமிழ்மணி விழுப்புரம் தாலுகா குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.விழுப்புரம் மகளிர் போலீஸ் புனிதவள்ளி கஞ்சனுாருக்கும், வெள்ளிமேடுபேட்டை சூரியா விழுப்புரம் மகளிர் போலீஸ் காவல் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் ராஜேஷ் சத்தியமங்கலத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கஞ்சனுார் பாஸ்கர் மயிலத்திற்கும், வெள்ளிமேடுபேட்டை ராஜேந்திரன் மேல்மலையனுாருக்கும், விழுப்புரம் தாலுகா முரளி வெள்ளிமேடுபேட்டைக்கும், திண்டிவனம் சுதன் பிரம்மதேசத்திற்கும், காவல் கட்டுப்பாட்டு அறை விஸ்வநாதன் கோட்டக்குப்பத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சத்தியமங்கலம் செல்வதுரை திண்டிவனத்திற்கும், விழுப்புரம் கட்டுப்பாட்டு அறை ராஜாராமன் திருவெண்ணெய்நல்லுாருக்கும், திண்டிவனம் செந்தில்முருகன் விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ