உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவலர் ஆயுத படைக்கு மாற்றம்

காவலர் ஆயுத படைக்கு மாற்றம்

மரக்காணம் : மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஆயுதபடைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.திண்டிவனம் உட்கோட்டத்திற்குட்பட்ட பிரம்மதேசம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் தொடர்பு கொண்டு இருந்ததாக புகார் எழுந்தது.எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் விசாரணையில், புகார் உறுதியானதையொட்டி, விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று முன்தினம் எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ