உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்றுகள் நடும் திட்டம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியை பசுமையாக்கும் வகையில் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், திண்டிவனம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகரப்பகுதியில் காலியான இடங்களில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. செஞ்சி பகுதியிலுள்ள வனத்துறையிலிருந்து லாரி மூலம் நேற்று காலை ஆயிரம் மரக்கன்றுகள் நகராட்சிக்கு கொண்டுவரப்பட்டதன. இந்த மரக்கன்றுகள் நகரின் ப்லவேறு பகுதிகளில் நடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ