மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
26-Jul-2025
விழுப்புரம்,; விழுப்புரம் அடுத்த காங்கியனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி வரவேற்றார். பேராசிரியர் ரவிச்சந்தர் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவுதமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா, கண்ணன், பேராசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வேதாத்திரி மகரிஷி 115வது பிறந்த நாளை முன்னிட்டு, மனவளக்கலை மன்ற அறங்காவலர் கருணாநிதி தலைமையில், பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தோட்டக்கலை உதவி அலுவலர் மாரியப்பன், சமூக ஆர்வலர்கள் கணேசன், இந்திராணி, ரங்கநாதன், துரைசாமி, ஜெயராமன், அந்தோணி கிறிஸ்து ராஜா, பிலிப் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Jul-2025