மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
விழுப்புரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, குளத்தங்கரையில் மரக்கன்றுகள் நட்டு, பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி பேசினார். கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சண்முகம், முருகன், சமூக ஆர்வலர்கள் சசிராஜா, பாலமுருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துசாமி, ராம், ராமகிருஷ்ணன், சிவானந்தம், சந்திரசேகர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.