உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீஸ் மோப்ப நாய் இறப்பு அரசு மரியாதையுடன் அஞ்சலி

போலீஸ் மோப்ப நாய் இறப்பு அரசு மரியாதையுடன் அஞ்சலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 35 கொலை வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய போலீஸ் மோப்ப நாய், வயது மூப்பால் இறந்தது.விழுப்புரம் மாவட்ட காவல் துறை மோப்ப நாய் படை பிரிவில், ராக்கி, 10; என்ற மோப்ப நாய் இருந்தது. இந்த நாய், வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை இறந்தது. அதையடுத்து, ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராக்கி, 10 ஆண்டுகளில் 35 கொலை வழக்குகளில், குற்றவாளிகளை அடையாளம் காண உதவி உள்ளது. இதில், 12 வழக்குகளில் எதிரிகளின் வீட்டினை துல்லியமாக அடையாளம் கண்டுள்ளது.கடந்த 6ம் தேதி அரகண்டநல்லுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனுாரில், வீடு புகுந்து திருடிய வழக்கில் எதிரிகளை அடையாளம் காண பெரிதும் உதவியுள்ளது. 2024ம் ஆண்டு தமிழக முதல்வரால், மாநில விருது, டி.ஜி.பி.,யிடம் சிறந்த பணிக்காக பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி