விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அருகே உள்ள ரயில்வே காலனிக்கு நேரில் சென்று, அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.அப்போது, அங்கிருந்த மக்கள், பழைய குடியிருப்புகள், பழுதடைந்து, பராமரிப்பின்றி இருப்பதாகவும், பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதனையடுத்து, ரயில் நிலையத்தில், அவசரகால மீட்பு பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.பிறகு, ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பயணிகள் காத்திருக்கும் அறையில் வசதிகள் குறித்து பார்வையிட்டார். அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.