த.வெ.க., தலைவர் பிறந்த நாள் விழா
விழுப்புரம்:த.வெ.க., தலைவர் விஜய் 51வது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் கட்சி சார்பில் குழந்தைகள், முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.த.வெ.க., தெற்கு மாவட்டம் சார்பில் நன்னாட்டம்பாளைத்தில் உள்ள குழந்தைகள், முதியோர் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கி, உணவு வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், மண்டல வழக்கறிஞர் பிரிவு தமிழரசன், மாவட்ட ஊடகப் பிரிவு மணி, கண்டமங்கலம் மேற்கு ஒன்றியம் சந்திரசேகர், பாஸ்கரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தனுஷ், மகளிரணி நிர்வாகிகள் பாக்கியா, ராபியாபேகம், அஞ்சுகம், ரம்யா, மகாலட்சுமி, முத்துக்கிளி, அஞ்சுகம், நகர தொண்டரணி ஹிஜாஸ் உட்பட பலர் பங் கேற்றனர்.ஏற்பாடுகளை மாவட்ட மகளிரணி பிரேமா செய்திருந்தார்.