மேலும் செய்திகள்
ம.தி.மு.க., பொதுக்கூட்டம்: வைகோ பங்கேற்பு
16-Aug-2025
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து த.வெ.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், சாந்தசீலன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நஸ்ருதீன் வரவேற்றார். வடமேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குணசரவணன், உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் வெற்றி குமரன், முருகையன், சந்திரசேகரன், சிவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் திருமலை, முருகன், ரகுபதி, சார்பு அணி அமைப்பாளர்கள் தசரதன், சரவணன், பிரியன், ராமச்சந்திரன், மணிகண்டன் அருளரசன், டேவிட், மகளிர் அணி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். நகர இணை செயலாளர் அருணகிரி நன்றி கூறினார். இதில் செஞ்சி பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை, சாலைகள் சேதமடைந்து இருப்பதை கண்டித்தும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திடவும், 13வது வார்டை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
16-Aug-2025