உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரியின் டயர்வெடித்து 3 வாகனங்கள் மீது மோதல்: விக்கிரவாண்டியில் பரபரப்பு

லாரியின் டயர்வெடித்து 3 வாகனங்கள் மீது மோதல்: விக்கிரவாண்டியில் பரபரப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் சரக்குஏற்றிய லாரியின் டயர் வெடித்ததில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதி சேதமடைந்தன.மதுரையிலிருந்து சென்னைக்கு நைலான் பொருட்களை ஏற்றிய லாரியை மதுரையை சேர்ந்த டிரைவர் கணேசன், 35; ஓட்டி வந்தார்.நேற்று பிற்பகல் 1.00மணியளவில் விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே உள்ள ஓட்டல் எதிரே வரும் போது லாரியின் முன் இடதுபுற டயர் வெடித்தது.இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி ஒருபுறமாக இழுத்து சென்ற சாலையோரம் நின்றிருந்த இரண்டு ஈச்சர் லாரிகள் மற்றும் ஒரு லாரி மீது மோதி நின்றது. இதில் மூன்று வாகனங்கள் சேதமாகியது. அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை .விக்கிரவாண்டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார், டோல்பிளாசா ஊழியர்கள் உடனடியாக கிரேன் உதவியோடு விபத்து இடர்பாடுகளை அகற்றி அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை