மேலும் செய்திகள்
பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
01-Jun-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கண்டாச்சிபுரம் அருகே சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகதிற்கு இடமான வகையில் பைக்கில் வந்த இரு வாலிபர்களை நிறத்தி வாகன சோதனை செய்தனர். அப்போது, 100 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது.விசாரணையில் மதுபாட்டில்கள் கடத்தியது, திருவண்ணாமலை மாவட்டம் செல்வபுரம் சேட்டு மகன் முரளி, 26; தட்சிணாமூர்த்தி மகன் தனுஷ், 21; என தெரியவந்தது. இருவரும் தங்களது உறவினரின் திருமணத்திற்காக புதுச்சேரி மதுபானங்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இருவரை கைது செய்த போலீஸ் மதுபானங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
01-Jun-2025