புகையிலை பொருட்கள் விற்பனை இரண்டு பேர் சிறையில் அடைப்பு
திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் குட்கா விற்பனை தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரோஷணை போலீசார், திண்டிவனம் ப.உ.ச. நகர் சந்தைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஜிக்கிரியா என்பவரின் மகன் அல்லாஹ் பகஷ்,49; என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய வாகன சோதனையில், தொழுப்பேடு அடுத்த மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அபிமன்யு மகன் கந்தகுமார், 37; என்பவர் குட்கா கொண்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 2520 பாக்கெட் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் ரோஷணை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.