உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது

பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது

திண்டிவனம், : திண்டிவனம் அருகே பைக்கில் குட்கா கடத்திய த.வெ.க., பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீத்தாபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், 650 குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், ரோஷணை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாசுதீன், 25; கோபிநாத், 25; எனவும், ரியாசுதீன் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ