மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
23-Jun-2025
செஞ்சி: செஞ்சி அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 50; நகை பெட்டிகளுக்கு கடை பெயர் அச்சிடும் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் காரணமாக இவருக்கு அல்சர் நோய் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி பச்சையம்மாள் உள்ளிட்டோருடன் புலிப்பட்டு கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த, 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுரேஷ் பூச்சி மருந்தை குடித்தார். செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். இது குறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jun-2025