மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத இருவர் சாவு
27-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகேவுள்ள திருக்கோவிலுார் சாலையில் நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விழுப்புரம் டவுன் வி.ஏ.ஓ., பத்மாவதி கொடுத்துள்ள புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
27-Dec-2024