உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திட்டமிடாத பாதாள சாக்கடை பணி வாகன ஓட்டிகள் கடும் அவதி

திட்டமிடாத பாதாள சாக்கடை பணி வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் : விழுப்புரம் கே.கே.ரோட்டில், திட்டமிடாத பாதாள சாக்கடை பணியால், மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விழுப்புரம் கே.கே.ரோடு, கணபதி நகர், சுதாகர் நகர், மணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் கணபதி நகர், சுதாகர் நகர் சாலையில் பள்ளம் தோண்டி மெயின் குழாய்கள் பதித்தனர். ஆனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. கே.கே.ரோடு சந்திப்பு, முக்தி அருகே பாதாள சாக்கடை மெயின் பைப் லைனுடன் இணைக்கும் கான்கிரீட் கட்டமைப்பு 2 மாதம் முன்புஅமைத்தனர். இதற்காக 1 மாதம் சாலை மூடப்பட்டது. பணிகள் முடிந்து வாகனங்கள் செல்ல துவங்கிய நிலையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் பள்ளம் தோண்டி, மெயின் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக 2வது முறையாக தற்போது சாலையை மூடியுள்ளனர். சரியான திட்டமிடல் இன்றி, ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டி குழாய்கள் இணைக்கும் பணி நடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி