மேலும் செய்திகள்
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
01-Sep-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.அதனையொட்டி, சுவாமிக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. மாலையில் நடந்த உறியடி திருவிழாவை முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இளைஞர்கள் ஆர்வமுடன் உறியடி திருவிழாவில் பங்கேற்றனர். சுவாமி மாடவீதி வழியாக ஊர்வலம் நடந்தது. கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை யாதவ சமூக முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
01-Sep-2024