உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி முகாம்

கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கல், கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது.விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை தாங்கினார். கவுன்சிலர் நந்தா நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் பாலாஜி தலைமையிலான குழுவினர், நாய்களுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி போட்டனர்.முகாமில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஜெர்மன் ஷெப்பர்ட், லேபர் டாக், டாபர்மேன், கன்னி, சிப்பிப்பாறை, டேஷ் உன் உள்ளிட்ட 56 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அவலுார்பேட்டை

அவலுார்பேட்டை கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் டாக்டர் செல்வராஜ், 10 க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !