மேலும் செய்திகள்
ஆரோவில்லில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆலோசனை
8 minutes ago
திண்டிவனத்தில் சூப்பர் ருசி பாலகம் திறப்பு
10 minutes ago
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
7 hour(s) ago
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பராமரிப்பு பணி காரணமாக வழியில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மதியம் 1:30 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில், ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், ஒலக்கூர் - மேல்மருவத்துார் இடையே ரயில் நிறுத்தப்பட்டது. தண்டவாள பராமரிப்பு பணி முடிந்த பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக அங்கி ருந்து ரயில் புறப்பட்டது. இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4:00 மணிக்கு வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், மாலை 5:05 மணிக்கு தாமதமாக வந்தது. இதனையடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து, மதுரைக்கு ரயில் புறப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
8 minutes ago
10 minutes ago
7 hour(s) ago