மூதாட்டியிடம் வைர கம்மல் அபேஸ்
திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு பஸ்சில் மூதாட்டியிடம், நகை வைத்திருந்த பர்ஸ் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, மூலக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி லட்சுமி, 66; இவர், நேற்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல, அரசு பஸ்சில் வந்துள்ளார்.கையில் எடுத்துச் சென்ற பையில், பர்சில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைர கம்மல், அரை சவரன் செயின் வைத்திருந்தார். திண்டிவனத்தில் இறங்கிய லட்சுமி, பழம் வாங்க பணம் எடுக்க பர்சை பார்த்த போது, காணாமல் போனது தெரிய வந்தது. புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.