மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
23-Sep-2024
செஞ்சி: வல்லம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள், கூட்டம் நாட்டார் மங்கலத்தில் நடந்தது.ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ஜெ., பேரவை செயலாளர் பாலமுருகன், இலக்கிய அணி வெங்கடாசலம், மகளிர் அணி சத்தியவாணி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் மஞ்சுளா குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., முன்னாகள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இளைஞரணி பிரித்திவிராஜ், தகவல் தொழில்நுட்ப அணி கோகுல்ராஜ், இளைஞர் பாசறை ஜெயபிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள் சுபாகர், சேகர், விக்னேஷ்குமார், மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
23-Sep-2024